கால்பந்து போட்டியில் ஜெர்மனி பெண்கள் அணி முதல்முறையாக தங்கம் வென்றது

380 0

201608210835305036_Germany-win-their-first-women-football-gold_SECVPFயோ ஒலிம்பிக் கால்பந்து போட்டியில் ஜெர்மனி பெண்கள் அணி முதல்முறையாக தங்கப்பதக்கம் வென்றது.

ரியோ ஒலிம்பிக் கால்பந்து போட்டியில் பெண்களுக்கான இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி அணி, சுவீடனை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஜெர்மனி அணி 2-1 என்ற கோல் கணக்கில் சுவீடனை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது. தோல்வி கண்ட சுவீடன் அணி வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது.

ஒலிம்பிக் போட்டியில் ஏற்கனவே 3 முறை வெண்கலப்பதக்கம் வென்றுள்ள ஜெர்மனி அணி தங்கப்பதக்கத்தை வெல்வது இதுவே முறையாகும். அத்துடன் ஒலிம்பிக் மற்றும் உலக கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற 3-வது அணி என்ற பெருமையையும் ஜெர்மனி பெற்றது. முன்னதாக நடந்த வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் கனடா அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசிலுக்கு அதிர்ச்சி அளித்து வெண்கலப்பதக்கத்தை பெற்றது.