இளஞ்செழியன் மீதான துப்பாக்கிப்பிரயோகம் – கைதானவருக்கு 16ம் திகதிவரை விளக்கமறியல்

270 0

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் பயணித்த வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவு பிரப்பிக்கப்பட்டது.

அண்மையில் இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டிருந்த துப்பாக்கி பிரயோகத்தில் அவரின் மெய் பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒரு மெய் காவலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment