4 அமைச்சுக்களின் செயலாளர்கள் மாற்றம்

287 0

நான்கு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதற்கமைய, விளையாட்டுத்துறை அமைச்சுக்கு ஜெயந்த விஜேரத்னவும், வௌிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சுக்கு எச்.எம்.காமினி செனவிரத்னவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சின் புதிய செயலாளராக நீல் ரஞ்சித் அஷோக தெரிவாகியுள்ளதோடு, நீர்ப்பாசன மற்றும் நீர் வளங்கள் அமைச்சின் செயலாளராக எம்.ஏ.சிசிர குமார ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நியமனங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வழங்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a comment