அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையீடு என சர்ச்சை: மன்னிப்பு கோரிய மார்க் ஸக்கர்பெர்க்

30555 0

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப்க்கு ஆதரவாக பேஸ்புக்கில் ரஷ்யர்கள் பிரச்சாரம் செய்ததாக எழுந்த சர்ச்சையில் மார்க் ஸக்கர்பெர்க் மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு டிரம்புக்கு சாதகமாக வாக்காளர்களின் மனநிலையை மாற்ற ரஷியர்கள் ஏராளமானோர் முகநூலில் பிரசாரம் செய்ததாக சர்ச்சை உருவாகியது. இதனையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை மாற்றியதில் பேஸ்புக்கின் பங்கு எதுவும் இல்லை என அந்நிறுவனம் தெரிவித்தது.

இந்நிலையில், அந்நிறுவன அதிபர் மார்க் ஸக்கர்பெர்க் தனது பக்கத்தில், ‘மக்களை ஒன்றுபடுத்துவதற்கு பதிலாக, அவர்களை பிளவுபடுத்தும் வேலைகளுக்கு எனது படைப்பு பயன்படுத்தப்பட்டு விட்டது. என்னால் காயப்பட்டவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனிமேல், மிகச்சிறப்பாக செயல்பட முயற்சி மேற்கொள்வேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

தான் மன்னிப்பு கோருவதற்கான காரணத்தை மார்க் ஸக்கர்பெர்க் நேரடியாக தெரிவிக்கவில்லை. இருப்பினும், இந்த விவகாரத்தில் எழுந்துள்ள எதிர்மறை விளைவுகளுக்காக அவர் மன்னிப்பு கேட்டிருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.