இலங்கை நாடாளுமன்றத்தின் 70 வருட பூர்த்தியை முன்னிட்டு இன்று விசேட சபை அமர்வு

381 0

இன்று மாலை 3 மணிகளவில் இந்த விசேட அமர்வுகள் ஆரம்பமாகவுள்ளன.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் சட்டத்தை இயற்றும் நிறுவகமான நாடாளுமன்றம் காணப்படுகின்றது.

இலங்கை நாடாளுமன்றம் 1947ஆம் ஆண்டு ஆரம்பமானது.

அதன்போது 101 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துபப்படுத்தினர்.

அப்போது நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் ஒரு வருடமாக காணப்பட்டது.

1947ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் முதலாவது பிரதமராக டி.எஸ்.சேனாநாயக்க தெரிவானார்.

அதுபோல் எதிர்கட்சி தலைவராக, லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் என்.எம் பெரேரா தெரிவானார்.

முதலாவது சபாநாயகராக ப்ரான்சிஸ் மோலமூர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோர் இணைந்து விசேட யோசனை ஒன்றை முன்வைக்க உள்ளனர்.

அது தொடர்பில் ஆளும் மற்றும் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்க கருத்து வெளியிடுவர் என தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment