அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் மகாத்மா காந்தியின் 148 ஆவது ஜெயந்தி தினம் யாழ்ப்பாண நகரில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு மலர் மாலை அனிவித்து அனுஸ்டிக்கப்பட்டது.
148 ஆவது ஜெயந்தி தினம், காந்தி சேவா சங்கத்தின் தலைவர் ந.சிவகரன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜன் கலந்து கொண்டார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற காந்தி ஜெயந்தி தின நிகழ்வில் முதலில் இந்து, பௌத்த, மற்றும் கிறிஸ்தவ மத குருமார்கள் மாலையிட்டு அஞ்சலி செலுத்தினர்.
அதனை தொடர்ந்து இந்திய துனைத்தூதுவர் மலர் மாலை அணிவித்ததை தொடர்ந்து, காந்தி சேவா சங்கத்தின் உறுப்பினர்கள் மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர்.
இதன்போது யாழ்.வேம்படி பெண்கள் உயர்தர மாணவிகளும், யாழ்ப்பாண மத்திய கல்லூரி மாணவர்களும் இணைந்து ரகுபதி ராகவ பாடலை இசைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.