ஜாதிக பலமுழுவ அமைப்பின் செயலாளரைப் பிடிக்க இரு பொலிஸ் குழுக்கள்

362 0

வாக்கு மூலம் அளிப்பதற்கு அழைக்கப்பட்டிருந்தும் எந்தவித அறிவித்தலும் இன்றி வருகை தராதிருந்த ஜாதிக பலமுழுவ அமைப்பின் பொதுச் செயலாளர் அரம்பேபொல ரதனசார தேரரை கைது செய்ய இரு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்கிஸ்ஸை பகுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த மியன்மார் அகதிகளுக்கு எதிராக கடந்த 26 ஆம் திகதி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டமை தொடர்பில் அக்மீமன தயாரத்ன தேரர் மற்றும்  அரம்பேபொல ரதனசார தேரர் ஆகியோர் வாக்குமூலம் பெற கொழும்பு குற்றப் பிரிவுக்கு  இன்று அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது, அக்மீமன தயாரத்ன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இருப்பினும், அரம்பேபொல ரதனசார தேரர் வருகை தராது தவிர்ந்து கொண்டுள்ளதாகவும் அவர் வராததற்கான காரணம் கூட அறிவிக்கப்படாதுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால், இவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸ் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment