மாணவ, மாணவிகளே நாட்டின் முக்கியமான வளம்!- ரணில் விக்ரமசிங்க

256 0

“சுரக்ஷ்சா சிறுவர் காப்புறுதி” திட்டத்திற்குத் தேவையான நிதி ஒவ்வொரு வருடமும் அரசால் வழங்கப்படும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

அத்துடன், நாட்டில் வலுவான பொருளாதாரத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளினால், இவ்வாறு நிதி வழங்க முடிந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“என்றும் காப்போம் தேசத்தின் பிள்ளைகளை” என்ற தொனிப் பொருளில் பாடசாலை மாணவ, மாணவிகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட “சுரக்ஷ்சா சிறுவர் காப்புறுதி” திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வௌியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

குறித்த நிகழ்வு இன்று அலரி மாளிகையில், பிரதமர் மற்றும் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது மேலும் கருத்து வௌியிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தமது பிள்ளைகளுக்கு ஏற்படும் சுகயீனங்களுக்கான செலவுகளை மேற்கொள்ள சில பெற்றோரால் முடியாதுள்ளது.

எனவே சுதந்திரக் கல்வி ஆரம்பிக்கப்பட்டு 75 வருடங்கள் கடந்துள்ள இச் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாட்டின் பாடசாலை மாணவர்களின் எதிர்காலத்திற்காக நாம் இந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளோம் என்றார்.

மேலும் மாணவ, மாணவிகளே நாட்டின் முக்கியமான வளம் எனவும், ரணில் விக்ரமசிங்க இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment