வடகொரிய ஜனாதிபதியின் சகோதரர் கொலை – கைது செய்யப்பட்ட பெண்கள் குற்றவாளிகள் இல்லை

251 0

வடகொரிய ஜனாதிபதியின் சகோதரர் கிம் ஜோங்-நம் கொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மலேசிய பெண்கள் இருவரும் குற்றவாளிகள் அல்லவென தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது

இந்த கொலை தொடர்பான வழக்கு மலேசிய நீதிமன்றில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது குறித்த இரண்டு பெண்கள் உண்மை நிலையை அறியாமலே இந்த கொலையை மேற்கொண்டதாக கண்டறியப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு மூலாதாரியாக இருந்த வடகொரியர், நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளமையும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் கோலாலம்பூர் வானூர்தி நிலையத்தில் வைத்து  கிம் ஜோங்-நாம் கொலை செய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் 25 மற்றும் 29 வயதான பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் வடகொரியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையில் பாரிய இராஜதந்திர முறுகலை ஏற்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment