அமெரிக்க லாஸ் வேகாஸில் இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோக சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
திறந்த வெளி அரங்கொன்றில் இசை நிகழ்ச்சி ஒன்று இடம்பெற்றிருந்த வேளை அருகாமையில் உள்ள விருந்தகத்தின் 32வது மாடியில் இருந்து இந்த துப்பாக்கிப்பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
இந்த அனர்த்தத்தில் 200 பேர்வரை காயமடைந்ததுள்ளனர்.
காயமடைந்தவர்களில் 14 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
துப்பாக்கிதாரியும் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிதாரியுடன் அந்த பிரதேசத்திற்கு வந்ததாக கருதப்படும் பிறிதொருவரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ச்சியாக தானியக்க துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்ற வேளை, இசைநிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த மக்கள் நாலாபுறமும் பீதியுடன் ஓடியதாக நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.