யாழ் கொக்குவில் பகுதியிலுள்ள கடையொன்றுக்குச் சென்ற வாள்வெட்டுக் குழு அங்கிருந்த பொருட்களை அடித்துத் துவம்சம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவம் கொக்குவில் சந்தியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொக்குவில் சந்தி பகுதியில் 3 மோட்டார் சைக்கிளில் 9 பேர் கொண்ட குழுவினர் வந்ததாகவும், குறித்த குழுவினர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, இறங்கி நடந்து வந்து அருகில் உள்ள கடைக்குள் நுழைந்துள்ளனர்.
அத்துடன் கடையிலிருந்த பொருட்களை அடித்து உடைத்து நாசகர வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்பின்னர் கடைக்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பெறுமதி மிக்க மோட்டார் சைக்கிள் ஒன்றினையும் அடித்து உடைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளர் பொலிசாருக்கு வழங்கிய தகவலின் பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.