அரிசி 100 ரூபாய், தேங்காய் 100 ரூபாய், மண்ணையா நாங்கள் சாப்பிடுவது? மற்ற பொருட்கள் விலையும், வரிச்சுமையும், கடன்களும் பில்லுகளும் தாங்க முடியவில்லை சம்பளத்தினை கூட்டு” என்று மும் மொழிகளிலும் அரசாங்கத்திற்கு எதிராக வவுனியா நகர் முழுவதும் முன்னிலை சோஷலிசக் கட்சியினரால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இச் சுவரொட்டிகள் தொடர்பாக சமூக ஆர்வலர் சந்திரகுமார் கண்ணன் கருத்து தெரிவிக்கையில்,
“இந்த விலை வாசி ஏற்றமானது தற்போது எல்லையற்று அதிகரித்து காணப்படுகிறது. அன்றாடம் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் உட்பட மத்திய வர்க்கத்தினையும், அரசாங்கத்தினையும் மிக மிக பாதித்துள்ளது. உண்மையிலேயே நல்லாட்சி வந்த பிறகு இந்த பொருட்களின் விலையேற்றம் மிக கடுமையாக காணப்படுகிறது.
கிராமப்புற மக்களுக்கும் சரி, ஏழை மக்களுக்கும் சரி தேங்காய் உணவுப் பொருட்களில் அத்தியாவசியமான ஒன்றாக காணப்படுகிறது. கஞ்சி வைத்து குடிப்பதாக இருந்தாலும் சரி அரிசியும் தேங்காயும் தான் தேவைப்படுகிறது. அதற்கு கூட வழியில்லாமல் செய்துள்ளது இந்த நல்லாட்சி அரசாங்கம்.
இதை மிக வன்மையாக கண்டிக்கிறேன். உண்மையிலேயே அரசாங்க ஊழியர்களின் சம்பளம் போதாமல் உள்ளது. சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் கட்டுப்பாடான விலை நிர்ணயத்துடன் விற்பனை செய்யப்பட வேண்டும்.
மக்கள் சிரமமில்லாமல் எளிதான வாழ்க்கையை வாழ்வதற்கு இந்த நல்லாட்சி அரசாங்கம் வழி செய்ய வேண்டும்” எனவும் தெரிவித்தார்.