புதிய அரசியலமைப்பிற்கு தீ வைத்து தடுப்போம்-விமல் வீரவன்ச

231 0

நாட்டை பிளவுபடுத்தி மாகாண சபைகளை அரசாங்கத்தின் பிடியில் இருந்து நீக்கும் அரசியல் அமைப்பே அரசாங்கத்தினால் கொண்டுவரப்படுகின்றது. புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டால் மாகாணங்களின் எல்லைதாண்டிய போக்கினை மத்திய அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். புதிய அரசியலமைப்பு பாரளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டால் தீ வைத்து தடுப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாதுக்கை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Leave a comment