உள்ளுராட்சி மன்ற தேர்தல் திருத்த சட்டமூலத்திற்கு எதிராக இன்றும் நாளையும் உயர் நீதிமன்றில் 7 மனுக்களை தாக்கல் செய்ய ஒன்றிணைந்த எதிர்கட்சி தயாராகின்றது.
தற்போதைய நிலையில் முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா உயர் நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
பழைய முறைப்படி தேர்தலை நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு பணிப்புரை விடுக்க வேண்டும் எனவும் அவர் அந்த மனுவின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தநிலையிலேயே இன்றும், நாளையும் ஒன்றிணைந்த எதிர்கட்சி 7 மனுக்களை தாக்கல் செய்யவுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமையவின் பொதுச் செயலாளர் உதய கம்மன் பில குறிப்பிட்டுள்ளார்.