அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியல்

594 0

மியன்மார் அகதிகளுக்கு இடையூறு விளைவித்ததாக குற்றச்சாட்டி கைது செய்யப்பட்ட அக்மீமன தயாரத்ன தேரர் உட்பட இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 09ம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டதாக எமது செய்தியாளர் கூறினார்.

கடல்மார்க்கமாக இலங்கைக்கு வந்த மியன்மாரைச் சேர்ந்த 30 ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் நீதிமன்றத்தின் உத்தரவின்படி கல்கிசையில் உள்ள வீடொன்றில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் தங்கியிருந்த வீட்டுக்கு முன்னால் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சிங்­கள ராவய அமைப்பின் தலைவர் அக்­மீ­மன தயா­ரத்ன தேரர், அரம்­பே­பொல ரத்ன­சார தேரர் ஆகி­யோரை இன்று தெமட்­ட­கொ­டையில் உள்ள கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் ஆஜ­ராகுமாறு உத்­தர­வி­டப்­பட்­டிருந்தது.

கல்­கி­சையில் கடந்த செப்­டம்பர் 26 ஆம் திகதி ரோஹிங்யா முஸ்­லிம்கள் மீதான அத்து மீறல் தொடர்­பி­லான விசா­ர­ணை­க­ளுக்­காக அவர்கள் இவ்­வாறு அழைக்­கப்பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் சட்­டத்­த­ரணி ருவன் குண­சே­கர தெரி­வித்திருந்தார்

Leave a comment