புதிய அரசியல் யாப்பு 3 இல் 2 பெரும்பான்மையுடன் பாராளுமன்றில் நிறைவேற்றப்படும் என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் சமகால அரசியல் கள நிலை தொடர்பான விழிர்ப்புணர்வு கருத்தமர்வு கலந்துரையாடல், மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றபோதே, அவர் இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று முதன் முறையாக கோரியது, இலங்கைத் தமிழரசுக் கட்சியே எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று முதன் முறையாக கோரிய கட்சி இலங்கை தமிழரசுக்கட்சி என்று குறிப்பிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், கடந்த 70 வருடங்களாக அந்த பாதையில் தமிழரசுக் கட்சி பயணித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
எந்த ஒரு அரசாங்கத்திடமும் தாங்கள் அமைச்சுப்பதவி கேட்டகவில்லை எனவும், இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.