அரச உத்தியோகத்தர்களிற்கான போக்குவரத்து சேவைகள் தடை!

275 0

வடக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களிற்காக உள்ளூராட்சி அமைச்சினால் மேற்கொள்ளப்படும் போக்குவரத்து சேவைகள் எதிர் வரும் 14ம் திகதியுடன் தடைப்படும் அச்சம் ஏற்படுவதாக அரச அலுவலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட அரச அலுவலகங்களில் பணி புரியும் உத்தியோகத்தர்களின் போக்குவரத்து நன்மை கருதி விசேட போக்குவரத்து சேவை நீண்டகாலமாக இடம்பெற்று வருகின்றது. இதற்காக ஓர் குறிப்பிட்ட தொகைப் பணமும் அறவிடப்பட்டே வந்தது.

இருப்பினும் இவ்வாறு அறவிடப்படும் பணத்தினை பல உத்தியோகத்தர்கள் செலுத்தாத காரணத்தினால் அச் சேவையானது பாரிய நட்டத்தில் இயங்குவதாக தெரிவித்து இடைநிறுத்தும் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் குறித்த சேவையானது  02ம் திகதியுடன் இடைநிறுத்த முடிவு எட்டப்பட்டிருந்தது. இருப்பினும் வட மாகாண முதலமைச்சர் சுகயீனம் காரணமாக ஓய்வில் இருப்பதனால் இது தொடர்பில் நேரில் ஆராய்ந்து இறுதி முடிவை எட்டும் வகையில் ஓர் தற்காலிக தீர்வு எட்டப்பட்டுள்ளது.

அதாவது குறித்த சேவையினை எதிர் வரும் ஒக்டோபர் மாதம் 14ம் திகதிவரையில் நடாத்த ஒப்புதல் அளிக்கப்பட்டு இச்சேவை இடம்பெறுகின்றது. இதனால் குறித்த திகதியின் பின்னர் இச் சேவை இடை நிறுத்தப்படும் அபாயம் கானப்படுவதாக சுட்டிக் காட்டும் அரச ஊழியர்கள் பணத்தை செலுத்தாத அரச ஏழியர்களிடம் அதனை அறவிட்டு சீரான முறையில் கொண்டு நடாத்த மாகாண சபை முன்வர வேண்டும்.

இதற்கு மாறாக முழு ஊழியர்களுமே பாதிக்கும் வகையில் குறித்த சேவையினை இடை நிறுத்தும் முடிவிற்கு செல்லும் முடிவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் . ஏனெனில் குறித்த சேவையானது 2010ம் ஆண்டு முதல் இடம்பெறும் இச் சேவையினை மாகாண சபை நிறுத்தும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

இது குறித்து வட மாகாண முதலமைச்சரின் அமைச்சின் செயலாளர் திருமதி.ரூபினி வரதலிங்கத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது ,

குறித்த சேவையில் தற்போது 7 பேரூந்துகள் சேவையில் ஈடுபடுகின்றன.்இதற்காக தனியான ஒதுக்கீடுகள் இல்லாதபோதும் இச்சேவை இடம்பெற்றுவந்தது. இதேநேரம் இச் சேவை பாரிய நட்டத்தின் மத்தியில் இடம்பெற்றபோதும் தற்போது போக்குவரத்து அதிகார சபை உலுவாக்கத்தின் பின்னர் தனிப்பட்ட சேவைகள் எவையும் இடம்பெற முடியாது. என்பதன் அடிப்படையிலேயே குறித்த சேவையை நிறுத்தும் முடிவு எட்டப்பட்டது.

இருப்பினும் ஊழியர்களின் போக்குவரத்து வசதிக்காக தனியார் போக்குவரத்து சங்கம்  ஊடக இப் பகுதிகளிற்கான போக்குவரத்திற்கும் ஒழுங்கு செய்து வழங்கப்பட்டுள்ளது. என்றார். –

Leave a comment