பட்டிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட இருவேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பட்டிருப்பு கல்வி வலயத்தின் பணிப்பாளர் நகுலேஸ்வரிக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்தை கண்டித்து சில ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பட்டிருப்பு கல்வி வலயத்தின் பணிப்பாளராக கடமையாற்றிவரும் நகுலேஸ்வரி திருக்கோயில் கல்வி வலயத்திற்கு இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த இடமாற்றமானது அரசியல் பலிவாங்கள் என தெரிவித்துள்ள பட்டிருப்பு பகுதி மக்கள் உடனடியாக இடமாற்றத்தை ரத்துச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை , சம்பவ இடத்திற்கு வருகை தந்த கோட்டக் கல்வி அதிகாரியொருவர் ஊடகவியலாளர்களையும் , ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களையும் கையடக்க தொலைப்பேசியூடாக புகைப்படம் எடுக்க முயற்சித்த வேளையில் இருதரப்பினருக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.