10 ஆயிரம் ரூபா சம்பாதிக்கும் நோக்கில் நண்பன் வழங்கிய கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

253 0

வவுனியா மத்திய பஸ் நிலையத்தில் இன்று மதியம் 12.30 மணியளவில் கேரளா கஞ்சாவுடன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட போதைத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்  அடிப்படையிலேயே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கொடிகாமத்திலிருந்து கல்மடு நோக்கி இ.போ.ச .பேரூந்தில் 6 கிலோ கேரளா கஞ்சாவினை கொண்டு சென்ற 35வயதுடைய நபரை வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து நண்பரொருவர் வழங்கியதாகவும் கஞ்சாவினை கல்மடுக்கு கொண்டு சென்றால் பத்தாயிரம் ரூபா பணம் கிடைக்கும் எனவும் குறித்த நபர் பொலிஸாரின் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a comment