துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி இளைஞன் பலி

12533 0

கட்டுபெத்த – மொரட்டுமுல்ல பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தோடு தொடர்புடையவர் என சந்தேகத்தின் பேரில் திக்வெல்ல பகுதியைச் சேர்ந்த 29 வயதான இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்த போது குறித்த சந்தேக நபரிடம் உள்நாட்டு துப்பாக்கி ஒன்று இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave a comment