இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகம், மன்னார் தாழ்வுப்பாடு பிரதான வீதி,எழுத்தூர் பகுதியில் நேற்று(2) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வின் போது, எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிரஜா ஆகியோர் இணைந்து புதிய அலுவலகத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.
குறித்த நிகழ்வில் மதத்தலைவர்கள்,யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன்,வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரெட்ணசிங்கம், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன், இலங்கை தமிழரசு கட்சியின் பொது செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான துரைராஜசிங்கம் உட்பட இலங்கை தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆரம்ப கால உறுப்பினர்கள் , பொது மக்கள் என பலர் குறித்த திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.