தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தற்போது மக்கள் செல்வாக்கு தேவை என பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்துள்ளார்.
இங்குரக்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.
கடந்த தேர்தல்களில் பொலன்னறுவையில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்றது.
எதிர்வரும் தேர்தலிலும் பொலுன்னறுவையில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெறும்.
வீழ்ச்சி அடைந்த பொருளாதாரத்தையே அரசாங்கம் பொறுப்பேற்றது.
5 வருடங்கள் அரசாங்கத்திற்கு உள்ளது.
முதல் இரு வருடங்களில் வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் கட்டியெழுப்பப்டும் பட்சத்தில் அடுத்த 3 வருடங்களில் தொழில் வாய்ப்புக்களை உருவாக்க முடியும்.
இவற்றை சரியாக மேற்கொள்வதற்கு மாகாண சபைகள் மற்றும் உளுராட்சி மனறங்களின் பலம் தேவைப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.