போரில் கணவனை இழந்த பெண் தலமைக்குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி அளிக்கப்பட்டுள்ளது.
இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினால் இவ்வாறு உதவியளிக்கப்பட்டுள்ளது.
போரில் கணவனை இழந்த முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் போராளிக்குடும்பத்திற்கு அவர்களின் நலிவான குடும்ப சூழலைக் கருத்தில்கொண்டு ‘உயர்த்தும்கரங்கள்’ செயற்திட்டத்தின் கீழ் வாழ்வாதார உதவியாக 45 ஆயிரம் ரூபா பெறுமதியான தையல் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.