இலங்கை நாடாளுமன்றம் விசேட சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

310 0

நாடாளுமன்றம் இன்று விசேட சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

நாடாளுமன்றத்தில் 70வது  ஆண்டு நிறைவை முன்னிட்டு நாளை இடம்பெறவுள்ள விசேட சபை கூட்டத்தின் பாதுகாப்பு பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

அதன்படி, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கான அறைகள் உள்ளிட்ட ஏனைய அறைகளும் முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

அதுபோல் விசேட அவைக்கூட்டம் நாளை இடம்பெறவுள்ள நிலையில், சாதாரண பொதுமக்களுக்கு பொதுமக்கள் அரங்குக்கு வர தடை செய்யப்படும்.

எனினும் வெளிநாட்டவர்களுக்கு மாத்திரம் அனுமதி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுறது.

Leave a comment