பல்கலை மாணவர்களுக்கு ஒத்துழைக்க தயார் – சைட்டம் மாணவர் பெற்றோர் சங்கம் 

238 0

பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் நியாயத்தை நிலைநாட்டும் பொருட்டு அரசாங்க பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொள்ளும் போராட்டத்திற்கு தாம் ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக மலபே தனியார் மருத்துவ கல்லூரியின் பெற்றோர் சங்கம் தெரிவித்துள்ளது.

மலபே தனியார் மருத்துவ கல்லூரியின் பெற்றோர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைத் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அரச வைத்திய பீட மாணவர்களின் பெற்றோர் சங்கத்திற்கும் மலபே தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களின் பெற்றோருக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்தானது.

Leave a comment