ஆயுத களஞ்சியம் அறிவுக் களஞ்சியமாக மாற்றப்பட்டுள்ளது – ராதாகிருஸ்ணன்

1142 0

ஆயுதம் ஏந்தி போராட்டம் செய்தவர்கள் ஜனநாயக வழிக்கு திரும்பி தமது கோரிக்கைகளை ஜனநாயக ரீதியாக வென்றெடுப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸணன் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் மூன்று மாடி கட்டிடத்திற்கான அடிக்கல்லும் தொழில்நுட்ப பீடமும் கல்வி இராஜாங்க அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.

தொடர்ந்து அங்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், 1987 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தற்போது அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் பாதுகாப்பு தரப்பினரின் ஒரு ஆயுத களஞ்சியம் இருந்தது.

அது மட்டுமல்லாமல் புலிகளின் தற்கொலை குண்டுதாரி முதன்முதலாக இங்கு தனது உயிரை இழந்ததாகவும் தெரியவருகின்றது.

ஆனால் இன்று இந்த இடத்தில் தொழில்நுட்ப பீடத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.அதாவது கல்வி கண்ணை திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

Leave a comment