வித்தியாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு வரலாற்று தீர்ப்பு-மைத்திரிபால சிறிசேன

399 0

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்யா வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரலாற்று தீர்ப்பாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

இன்று பாடசாலையில் மாத்திரமே சிறுவர்களுக்கு பாதுகாப்பு உள்ளது. நீண்ட நாட்களில் எப்போதாவது ஒரு முறை மாத்திரமே பாடசாலையில் சிறுவர்களுக்கு பிரச்சினைகள் நேர்ந்ததாக நாம் அறிகின்றோம்.

இவ்வாறான நிலையில் தனது வீடுகளிலும் கூட தாய் தந்தையரின் இடத்திலிருந்து பாதுகாப்பு கிடைத்தாலும் தாய் அல்லது தந்தையரின் சகோதர்களினால் சிறுவர்கள் நெருக்கடிகளை எதிர்கொள்கின்ற நிலையிலேயே சமூகம் உள்ளது.

இன்றைய தினத்திலாவது அது குறித்து ஆழமாக சிந்தித்து பார்க்க வேண்டியது அவசியமாகின்றது.

அண்மையில் குருணாகல் மாவட்டத்தில் ஒரு சிறு குழந்தை கொலை செய்யப்பட்தை நாம் அறிந்திருபோம்.

அது போலவே யாழ்ப்பாணத்தில் புங்குடு தீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் நீதிவான்கள் வழங்கிய தீரப்பும் வரலாற்று தீர்ப்பாகும் என்றார்.

Leave a comment