மாகாண சபைத் தேர்தல் அடுத்த வருடம் நடாத்தப்படுவதற்கு 50 வீதமே சாத்தியம்-மஹிந்த தேசப்பிரிய

366 0

அடுத்த வருடம் மாகாண சபைத் தேர்தலை நடாத்தும் எதிர்பார்ப்பு 50 வீதமே உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

புதிய மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்ட மூலத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகளின் தாமதம் இதற்குக் காரணமாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வட மேல், கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் காலம் இவ்வாரம் நிறைவடைந்துள்ளது. இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment