கண்டி அரச வைத்தியசாலையில் இருதய மாற்று சத்திர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 19 வயது யுவதி இன்று உயிரிழந்துள்ளார்.
கண்டி அரச வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது இருதய மாற்று சத்திர சிகிச்சையாக இது கருதப்படுகின்றது. அளுத்கம, கலுவாமோதர பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த இருதய மாற்று சிகிச்சை கடந்த 27 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு முன்னர் அவ்வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட இருதய மாற்று சத்திர சிகிச்சை வெற்றியளித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.