யாழ்ப்பாணத்தில் 130கிலோ கஞ்சா மீட்பு

319 0

625.0.560.320.160.600.053.800.668.160.90-30யாழ்ப்பாணம் வடமராட்சிப் பிரதேசத்தின் உடுத்துறையில் இன்று மதுவரித் திணைக்களமும் கடற்படையும் இணைந்து 130கிலோ கஞ்சாவை மீட்டுள்ளனர். இதன் பெறுமதி 2கோடியே 60 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் சந்தேக நபர்கள் 5பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், ஒரு படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 130 கிலோ கஞ்சாவும் கொழும்புக்கு கடத்தப்படவிருந்த நிலையிலேயே கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்படி மணற்காடு பகுதியில் 100 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், உடுத்துறை பகுதியில் 30 கிலோ கஞ்சா கடத்திவந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடத்தப்பட்ட கஞ்சா பொதிகளும், கைதானவர்களும், படகுகளும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.