நாட்டில் உள்ள அனைத்து வகை ஆயுதங்கள் பயன்பாட்டை கண்காணிக்கும் வகையில் ஒருங்கிணைந்த துப்பாக்கி உரிமம் வழங்கும் முறையை அறிமுகம் செய்ய மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து வகை ஆயுதங்கள் பயன்பாட்டை கண்காணிக்கும் வகையில் ஒருங்கிணைந்த துப்பாக்கி உரிமம் வழங்கும் முறையை அறிமுகம் செய்ய மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக புதுவை காவல்துறை, சட்டத்துறை, வக்கீல்கள் பங்கேற்ற பயிலரங்கம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
இதில் தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா தலைமை தாங்கி, இணையதளம் மூலமாக துப்பாக்கி உரிமம் பெறும் முறையை தொடங்கி வைத்தார். இதில் சட்டத்துறை செயலாளர் செந்தில்குமார், போலீஸ் டி.ஜி.பி. சுனில் குமார் கவுதம், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ் ரஞ்சன் மற்றும் காவல்துறை, சட்டத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அதேபோல் காணொலி காட்சிகள் மூலமாக டெல்லி அதிகாரிகளுடனும், காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளை சேர்ந்த அதிகாரிகளும் இணைந்து இருந்தனர்.