யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவை சேர்ந்தவர்கள் நேற்றையதினம் ஆயுத பூஜை செய்துள்ளனர்.
நவராத்திரி விரத ஆயுத பூஜை வழிபாட்டின் போதே ஆவா குழுவினர் தமது வாள்கள், கைக்கோடாரிகள் போன்றவற்றுக்கு பூஜை செய்துள்ளனர்.
இது தொடர்பான புகைப்படங்களை ஆவா குழுவினர் தமது முகநூல்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
இதேவேளை, ஆவா குழுவினரின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ள போதிலும் ஆவா குழுவினர் ஆயுத பூஜை செய்துள்ளனர்.