முகநூலில் நன்கொடை திரட்ட தகவல் வெளியிட்ட இரட்டை குடியுரிமை பெற்றவர் துபாயில் கைது செய்யப்பட்டார்.இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளின் குடியுரிமையை பெற்றவர், ஸ்காட் ரிச்சர்ட்ஸ் (வயது 42). இவர் துபாயில் வசித்து வருகிறார். ஆப்கானிஸ்தானில் உள்ள அகதிகளுக்காக போர்வைகள், தார்ப்பாய்கள் வாங்குவதற்காக ஒரு நிதி வசூலித்து வந்தார். இதுபற்றி அவர் தனது முகநூல் பக்கத்தில் தகவல் வெளியிட்டார். ஆனால் அவர் அனுமதியின்றி நன்கொடை திரட்டியதாக புகார் எழுந்தது.
இதனால் அவர் துபாயில் உள்ள தனது இல்லத்தில் கைது செய்யப்பட்டார். ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிய சட்டங்கள், பதிவு செய்யாமல் எந்தவொரு தொண்டு நிறுவனமும் செயல்படுவதற்கு அனுமதி மறுக்கின்றன. தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள ஸ்காட் ரிச்சர்ட்ஸ், வாரம் ஒரு முறை தன் மனைவியை பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொலைபேசி அழைப்புகளை செய்யவும் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.