மஹிந்த தமிழ் மக்களின் ஆதரவைப் பெற முயற்சி

453 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களின் ஆதரைவப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பை மையமாகக் கொண்ட தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சில முக்கிய தமிழ் பிரமுகர்களை மஹிந்த ராஜபக்ச சந்தித்து உரையாடுவதாகவும் தெரியவந்துள்ளது.

அதேவேளை நேற்று வெள்ளிக்கிழமை மாலை முக்கியமான தமிழ் பிரமுகர் ஒருவரை மஹிந்த ராஜபக்ச சந்தித்து உரையடினார் என தமிழ் கட்சி ஒன்றின் முக்கிய பிரமுகர் ஒருவர் கூறியதாக ஜ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சிக்கு தமிழ் மக்களின் ஆதரவை பெறும் நோக்கில் இந்த சந்திப்புகள் இடம்பெறுவதாகவும் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவது மற்றுமொரு நோக்கம் என்றும் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை முன்னாள் அமைச்சரும் மஹிந்த ராஜபக்சவின் சகோதரருமான பசில் ராஜபக்ச யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

அங்கு கட்சி ஆதரவாளர்களை சந்தித்து மேலும் புதிய உறுப்பினர்கள் பலரை சேர்த்துக் கொள்ளும் நோக்கில் அவரது பயணம் அமையவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்த ராஜபக்ச தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனையும் இரண்டு தடவைகள் சந்தித்து உரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment