சந்தையில் அதிகரித்துள்ள தேங்காயின் விலையை மட்டுப்படுத்தும் நோக்கில் எதிர்வரும் 2 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 70 ரூபா கட்டுப்பாட்டு விலையில் தேங்காயை சந்தைப்படுத்த பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ச.தொ.ச. விற்பனை நிலையங்களிலும், நடமாடும் தேங்காய் விற்பனை லொறிகளிலும் கட்டுப்பாட்டு விலையில் தேங்காயைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அமைச்சு அறிவித்துள்ளது.
அரச தோட்டங்களிலிருந்து பெறப்படும் தேங்காய்கள் இவ்வாறு விநியோகிக்கப்படவுள்ளதாவும், தேங்காய் விலை 100 ரூபாவாக அதிகரித்துள்ளதனால் ஏற்பட்டுள்ள மக்களின் சுமையைக் குறைப்பதற்கே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.