கல்கிஸ்ஸ பிரதேசத்தில் மியன்மார் அகதிகள் தங்கியிருந்த வீட்டின் முன்னே வன்முறையாக நடந்து கொண்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றவியல் பிரிவினால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
43 வயதுடைய குறித்த பெண் கல்கிஸ்ஸ பிரதேசத்தினை சேர்ந்தவர் என காவற்துறை தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவத்துடன் மொரட்டுவ – ராவனாவத்த பிரதேசத்தினை சேர்ந்த 34 வயதுடயை நபர் ஒருவர், நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.