வீரகெட்டியவில் இருந்து கொழும்பிற்கு கொண்டுவர முயற்சித்த 50 லட்சம் ரூபாய் பெறுமதியான மரக்குற்றிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எம்பிலிபிட்டிய வன அதிகாரிகள் மற்றும் காவல்துறை விசேட படையும் இணைந்து உடவல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பாரவூர்தியில் ஏற்றிச் செல்லப்பட்ட மரக்குற்றிகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
பின்னர் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள், எம்பிலிபிட்டிய காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அவர்கள் எம்பிலிபிட்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.