கல்கிசைப் பிரதேசத்தில் மியன்மார் ரோஹிஞ்யா அகதிகளை தாக்க முயற்சித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒருவர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்ற தடுப்புப் பிரிவினர் நேற்று அவரை கைது செய்தனர்.
34 வயதான சந்தேகநபர் இன்று (30) கல்கிசை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தார். இதன்படி அவரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அன்றைய தினம் குறித்த சந்தேகநபர் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளார்.