காசல்ரீயில் 1 லட்சம் எங்கிலான் மீன் குஞ்சிகள் வளர்க்கும் திட்டம் ஆரம்பம்

314 0

நன்னீர் மீன்வளர்ப்பு தொழில்துறையை மேம்படுத்தும் நோக்கில் காசல்ரீ நீர்தேக்கத்தில் கூடு அமைத்து 1 லட்சத்து இருபத்தைந்தாயிரம் மீன்குஞ்சிகளை வளக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 

மத்திய மாகாண மீன்பிடி அமைச்சின் நிதியொதுக்கீட்டில் நுவரெலியா மாவட்ட நன்நீர் வளர்ப்பு திணைக்கத்ததினால் இன்று (30) குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. காசல்ரீ நன்னீர் மின் வளர்ப்பு சங்கத்தினரின் வேண்டுகோளுக்கு அமைய விடப்பட்ட மீன் குஞ்சுகள் பெரியளவில் வளர்ச்சியடையும் வரை நீர்தேக்கத்தினுள் கூடு அமைத்து 45 நாட்களுக்கு பாதுகாப்பாக வளர்த்த பின் பின்னர் நீர்தேக்கத்தில் விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்

மேலும் குறித்த மீன் குஞ்சி இனமானது ஒரு வருட காலப்பகுதியில் பத்து மடங்கு உற்பத்தியாவதுடன் ஒரு மீன் 45 கிலோ கிராம் வரை வளர்ச்சியடையும் எனவும் தெரிவித்தனர்.

Leave a comment