அமெரிக்க சுகாதார செயலர் ராஜினாமா!

708 0

அரசுப்பணிகளுக்காக தனியார் சொகுசு விமானங்களை பயன்படுத்திய விவகாரத்தில் அமெரிக்க சுகாதார செயலர் டாம் பிரைஸ் ராஜீனாமா செய்ததை அடுத்து அப்பதவிக்கு இரு இந்திய வம்சாவளியினரின் பெயர்கள் அடிபடுகின்றன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தில் சுகாதாரத்துறை செயலராக பணியாற்றி வந்த டாம் பிரைஸ் அரசுப்பணிகளுக்காக பல்வேறு இடங்களுக்கு செல்லும் போது அதிக டிக்கெட் மதிப்புடைய தனியார் விமானங்களை பயன்படுத்தியதாக குற்றாச்சாட்டு எழுந்தது.

தேசிய பாதுகாப்பு பணியில் தொடர்பில்லாத அரசுப்பணிகளுக்காக செல்லும் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் வணிக விமானங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற விதி இருக்கும் நிலையில், டாம் பிரைஸ் 26 முறை தனியார் விமானங்களை பயன்படுத்தியதாக கூறப்பட்டது.

இந்த விவகாரத்தை கொண்டு எதிர்கட்சிகள் மற்றும் ஊடகங்கள் கேள்வியெழுப்பியதால், அவர் கடந்த மே மாதம் மன்னிப்பு கோரிநார். இந்நிலையில், அவர் திடீரென தனது பதவியை ராஜீனாமா செய்துள்ளார். அவரது ராஜீனாமாவை அதிபர் டிரம்ப் ஏற்றுக்கொண்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

காலியாக உள்ள சுகாதார செயலர் பதவிக்கு, சீமா வர்மா மற்றும் பாபி ஜிண்டால் ஆகிய இந்திய வம்சாவளியினரின் பெயர்களை டிரம்ப் தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவரில் ஒருவர் விரைவில் நியமிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment