இந்திய ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியானதாக பாகிஸ்தான் புரளி

1046 0

இந்திய ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தங்கள் நாட்டை சேர்ந்த 3 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் இன்று குற்றம்சாட்டியுள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதிகளில் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய படைகளும் பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தங்கள் நாட்டை சேர்ந்த 3 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் இன்று குற்றம்சாட்டியுள்ளது.

பாகிஸ்தானின் ராவல்கோட் நகரின் அருகே உள்ள ராக்சிக்ரி எல்லைக்கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் கையெறி குண்டு தாக்குதல்களில் ஒரு பெண் உள்பட இருவர் பலியானதாகவும், இதையடுத்து அந்த இடத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்ததாகவும், மூன்று ராணுவ வீரர்கள் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் ராணுவ வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

Leave a comment