தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிறுவனுக்கு ஏற்றப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலில் பூஞ்சைகள் இருந்ததாக புகார் எழுந்ததை அடுத்து மருத்துவமனை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் விஜயநகரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துமனையில் நேற்று முன்தினம் வலிப்பு நோய் காரணமாக 11 வயது சிறுவன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது, சிறுவனுக்கு குளுக்கோஸ் பாட்டில் மூலம் ஏற்றப்பட்டுள்ளது.
குளுக்கோஸ் பாட்டிலில் பூஞ்சைகள் இருப்பதை பார்த்த சிறுவனின் பெற்றோர் உடனடியாக அதனை துண்டித்தனர். இதனையடுத்து, அந்த குளுக்கோஸ் பாட்டிலுடன் போலீஸ் ஸ்டேசன் சென்று புகாரளித்துள்ளனர்.
புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், குளுக்கோஸ் பாட்டிலை பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மருத்துவமனையே எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் செயல்படுவது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.