65 பொலிஸ் உத்தியோகத்தர்கள் அதிரடி மாற்றம்

312 0

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் அறுபத்தைந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பல்வேறு பொலிஸ் நிலையங்களில் ஏற்பட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கான தேவையை அடுத்தே இந்த இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இந்த இடமாற்றத்துக்கான உத்தரவு கண்டி மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி மஹிந்த ஏக்கநாயக்கவுக்கும், சம்பந்தப்பட்ட ஒத்தியோகத்தர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், குறித்த உத்தியோகத்தர்கள் அனைவரும் கண்டி மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

Leave a comment