இனங்களுக்கிடையில் தேவையற்ற விதத்தில் பேதங்களை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் பௌத்த தேரர்கள் செயற்படுவது பௌத்த மதத்தின் மீது அபகீர்த்தியை ஏற்படுத்தும் என அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வரகாகொட ஞானரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
இக்காலகட்டம் இதற்கான ஒரு சந்தர்ப்பம் அல்லவெனவும் அவர் கூறியுள்ளார்.
மாற்று மதத்தவர்களுக்கு இந்நாட்டில் நோவினை செய்யும் விதத்தில்கு பிக்குகள் நடந்து கொள்வதானது தமது மதத்துக்கே செய்து கொள்ளும் அகௌரவமாகும் எனவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் மாதொட ரஜமகா விகாரையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.