மியன்மார் அகதிகள் மீதான தாக்குதல் சம்பவம் மற்றுமொருவர் கைது

298 0

மியன்மார் அகதிகள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு குற்றவியல் பிரிவினரால் 43 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கல்கிஸ்ஸைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என  கூறப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment