மிஹிந்தலை பிரதேசத்தில் இரு இளைஞர்களை தகாத முறையில் தாக்கிய இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சேவைக் காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுர பொலிஸ் பிரிவிலுள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கே இவ்வாறு சேவைக்காலத் தடை வழங்கப்பட்டுள்ளது.
திருட்டுக் குற்றமொன்றுக்காக கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மீது இந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் முறைகேடாக தாக்குதல் நடாத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
தாக்குதலுக்குள்ளான இளைஞர்கள் இருவரும் அனுராதபுர சிரேஷ்ட பொலிஸ் தலைமை அதிகாரியிடம் முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் இவர்களுக்கு சேவைக் காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.