யார் என்ன சொன்னாலும் ரோஹிங்ய மக்களையும் நாம் மனிதர்களாகவே பார்க்க வேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் அமைச்சர் தலதா அத்துக்கோரல தெரிவித்தார்.
அகதிகள் என்பதற்காக அவர்களை எமக்கு கடலில் வீசிவிட முடியாது. சர்வதேச ரீதியில் எமது நாடு உடன்பட்ட சில நிபந்தனைகள் உள்ளன. அந்த நிபந்தனைகளுக்கு ஏற்ப நாம் செயப்பட வேண்டியுள்ளோம்.
கூட்டு எதிர்க் கட்சி நாளுக்கு நாள் ஒவ்வொரு பிரச்சினையை ஏற்படுத்தி வருகின்றது. அந்த அமைப்புக்காக பணியாற்றும் காவியுடை தரித்த ஒரு கும்பல் உள்ளது. இது தான் இந்தப் பிரச்சினைக்குக் காரணமாகவுள்ளதாகவும் அமைச்சர் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் மேலும் சுட்டிக்காட்டினார்.