புதிய அரசியலமைப்புக்காக பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் நாடு முழுவதும் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக கூட்டு எதிர்க் கட்சி அறிவித்துள்ளது.
மஹிந்த குழுவின் பிரதி அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் டி சொய்ஷா இதனைத் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ரீதியில் இதற்கான எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசியலமைப்பு நாட்டுக்குத் தேவையற்ற ஒன்று எனவும், இதற்காக பல தரப்புக்களிலிருந்தும் எதிர்ப்புக்கள் எழுந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.