உண்மையான நேர்மையான அற்ப்பணிப்புடன் செயற்ப்பட விரும்புபவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிபேன்-அங்கஜன் இராமநாதன்

544 0
உண்மையான நேர்மையான அற்ப்பணிப்புடன்  செயற்ப்பட விரும்புபவர்களுக்கு  நான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிபேன். அங்கஜன் இராமநாதன் தெரிவிப்பு.
 கடந்த புதன்கிழமை பன்முக படுத்தைபட்ட நிதி மூலம் சனசமூக நிலையங்களுக்கான உதவிகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போது அவர் தெரிவித்தார்.
 மேலும் தெரிவித்ததாவது உண்மையாகவும் நேர்மையாகவும் அற்ப்பணிப்புடனும் மக்களுக்கு சேவைசெய்ய வேண்டிய தேவை உள்ளது அரசியல் ஒரு தொழில் அல்ல அரசியலை ஒருதொழிலாக கருதினால் நிச்சயமாக என்னிடத்தில் இடமில்லை மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற சேவை மனப்பாண்புடன் வருபவற்கு நிச்சயமாக நான் இடமளிப்பேன்
 பெருமளவான இளைஞனர் யுவதிகள் முன்வந்துள்ளனர் புதிதாக இளைஞனர் யுவதிகள்  குறிப்பாக செயலாற்றும் திற்ண்களுடைய இளைஞனர்கள் முன்வந்தால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் அத்துடன் கட்சி ரீதியாக நீண்டகலாமாக பயணித்து கொண்டிருப்பவர்கள் நேர்மையான வழியில் பயணித்து கொண்டிருப்பவர்கள்  கைசுத்தமான இதுவரை எந்தவிதமான கையாடல்களும் இல்லாத கைசுத்தத்துடன் முன்வருபவர்கள் என்னுடன் இணைந்துகொள்ளலாம்
 வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முக தேர்வுகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தற்பொழுது நடைபெற்று கொண்டிருக்கின்றது விரும்பியவர்கள் இணைந்து கொள்ளலாம்
 இவ்வாறானவர்கள் முன்வருகின்ற போது எதிர் காலத்தில் சுத்தமான லஞ்சம் அற்ற ஒரு சமூகத்தை நாம் கட்டி எழுப்ப முடியும் என்றும் அவர் தெரிவித்தார்,

Leave a comment