அண்மையில் இடம்பெற்ற தொடரூந்து தடம் புரள்வுகள் குறித்து ஆராய தொடரூந்து திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
தொடரூந்து திணைக்கள முகாமையாளர் எம். எஸ். அபேவிக்ரம இதனைத் தெரிவித்தார்.
தொடரூந்து திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட மூவரடங்கிய குழுவால் இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்